ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கை... பதிலுக்கு இன்று கெனிஷா செய்த செயல் இணையத்தில் வைரல்!
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து சர்ச்சை தான் சமீக காலமாக இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் ஆர்த்தி ரவி நேரடியாகவே கெனிஷாவை தாக்கி வெளியிட்டிருற்த அறிக்கைக்கு பதிலாக இன்று கெனிஷா செய்திருக்கும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ரவியின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், இன்னொரு விஷயமும் வெளியானது. அது ஒரு புகைப்படம் ஆகும். இதில் அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் இருந்தார்.
இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அனைத்து ஊடகங்களும் இருவரும் காதலிக்கின்றனரா என கிசுகிசுக்களை பரப்ப தொடங்கின. இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் நடந்தது. இதில், கோல்டன் நிற ஆடை அணிந்து ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர்.
போதாக்குறைக்கு இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு வேறு சென்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து ஒரு பரப்பான அறிக்கையை வெளியிட்டார். பின்னர் தான் முதுகில் குத்தப்பட்டுவந்ததாகவும் தற்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் குறிப்பிட்டு ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் முதுகில் குத்தப்படதாக குறிப்பிடப்டடது சொத்துகளை அபகரித்தாக குறிப்பிட்டது அனைத்தும் பொய் ஒரு ரூபாயால் ரவி மோகன் ஏமாற்றப்பட்டிருந்தால் கூட ஆதாரத்தை வெளியிடட்டும் என் ரவி மோகனனின் மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஏற்கனவே ரவி மோகன் வெளியிட்ட பதிவு என்னுடைய "வாழ்வின் ஒளி" என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு நேற்று ஆர்த்தி வெளியிட்ட பதிவில், "உங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவரால் தான் எங்களுடைய வாழ்க்கையில் இருள் வந்துவிட்டது" என்று கூறி இருந்தார்.
அதுபோல "கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் எதற்காக நம் குடும்பத்திற்குள் பிரச்சனை வருவதற்கு காரணமாக இருந்த பெண் வீட்டிற்கே போக வேண்டும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கெனிஷா செய்த செயல்
இதற்கிடையில் கெனிஷா தன்னைப் பற்றியும் ரவி மோகன் பற்றியும் அவர் ஆறுதலாக வரும் பதிவுகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருக்கும் பாடகி சுசித்ரா உட்பட சிலர் சப்போர்ட் செய்து கொண்டு இருந்தனர். அந்த வீடியோக்களை கெனிஷா தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வந்தார்.
ஆனால் நேற்று ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த எல்லா பதிவுகளையும் ஸ்டோரிகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
நேரடியாகவே கெனிஷா பற்றி ஆர்த்தி போட்ட பதிவால் இப்போது கெனிஷா இந்த முடிவு எடுத்து இருக்கிறாரா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகினின்றனர். குறித்த விடயம் தற்போது இணையத்தில் மற்றொரு புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |