சர்ச்சை எழும் முன் பட்டுவேட்டி சட்டை யில் ரவிமோகனுடன் கெனிஷா- இணையத்தில் கசிந்த video
“நாங்க காதலிக்கவில்லை..” என கெனிஷா பல பேட்டிகளில் கூறிய வந்த நிலையில், ரவி மோகனுடன் கைக்கோர்த்து நிற்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார்.
அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
இப்படியொரு புகைப்படம் எடுத்தார்களா?
இந்த நிலையில், ரவிமோகன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய பெண் தோழியான கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியன.
இதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் திருமணத்திற்கு செல்லும் முன்னர் கைக்கோர்த்து இருவரும் எடுத்து கொண்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சர்ச்சைகள் எழுந்த பின்னர், நாங்கள் காதலிக்கவில்லை. அவர் என்னுடைய நண்பர்..” என பேசி வந்த கெனிஷாவின் இந்த புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பதிவிற்கு எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக வந்த வண்ணம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |