ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கிய டிரைவர் - உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய விமானி
ஆற்றின் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய டிரைவரை உயிரை பணயம் வைத்து விமானி ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய விமானி
கென்யாவில் யானை மீட்பு மையத்தின் டிரக் ஒன்று ஆற்றைக் கடந்துக் கொண்டிருந்தது. அப்போது, ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் டிரக் ஆற்றில் சிக்கிக்கொண்டது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் டிரக் டிரைவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயத்தோடு டிரக் மேலே தொங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு விரைந்து வென்ற மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரின் உதவியோடு, உயிருக்குப் போராடிய டிரைவரை ஆற்றின் வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்டனர். உயிரை காப்பாற்றிய அந்த விமானியின் பெயர் Taru Carr-Hartley என்று தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, உயிரை காப்பாற்றிய விமானிக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
The Aerial Unit of an elephant rescue center in Kenia saved a truck driver whose truck was swept away in a river which suddenly flooded while he passed it. The pilots name is Taru Carr-Hartley. pic.twitter.com/1RdQahNUd6
— Domenico (@AvatarDomy) May 4, 2023