நீரிழிவு நோயாளர்களுக்கான ஸ்பெஷல் உணவு “கேழ்வரகு அப்பம்“
தற்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்கும் நோய் தான் இந்த நீரிழிவு.
நீரிழிவு வந்து விட்டாலே சிலருக்கு உணவு மீதான அச்சம் அதிகரித்து விடும். சிலருக்கும் அக்கறை அதிகரித்து விடும். அதற்காக உணவுக் கட்டுப்பாடுகளை நினைத்துப் பலரும் அலறுவார்கள்.
உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் சிலர் எதனையும் சரிவ சாப்பிடமாட்டார்கள். நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
அதிலும் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறன சிறந்த உணவுதான் கேழவரகு அப்பம்.
அந்தவகையில் இந்தக் கேழ்வரகு அப்பத்தை எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 2 கப்
சாதம் - அரை கப்
சோடா மா - அரை தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வையுங்கள்.
சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் சோடா மா மற்றும் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். அப்பம் செய்யும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சுட்டு எடுங்கள்.
அவ்வளவுதான் கேழ்வரகு அப்பம் ரெடி.
இதற்கு ஏற்ற தேங்காய்பால், முட்டை குருமா போன்ற உங்களுக்கு பிடித்த உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.