குழந்தை போல் மாம்பழத்தை மெய்மறந்து சாப்பிட்ட கீர்த்தி சுரேஷ்
மாம்பழத்தை மெய்மறந்து ருசித்து சாப்பிட்ட கீர்த்தி சுரேஷின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாம்பழத்தை ருசித்து சாப்பிட்ட கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், செல்ல வளர்ப்பு நாய் அருகில் இருக்க, மாம்பழத்தை எடுத்து ரசித்து ருசிப் பார்த்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அடடா... ஒரு மாம்பழமே, ஒரு மாம்பழத்தை ருசி பார்க்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.