செதுக்கி வச்ச சிலையாய் கொள்ளையழகில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - லேட்டஸ்ட் கிளிக்
கொள்ளையழகில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிங்க் கலரில் உடை அணிந்து கொள்ளை அழகில் போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆஹா... என்ன அழகு... என்று அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.