கருப்பு சேலையில் சிலைபோல் நின்ற கீர்த்திசுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்
இணையதளங்களில் நடிகை கீர்த்திசுரேஷ் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சேலையில் சிலைபோல் நின்ற கீர்த்திசுரேஷ்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு சேலையில் சிலை போல் நின்று போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.