ஏன் இப்படி பண்றீங்க... என் காதலனை நானே காட்றேன்... - வதந்தியால் கடுப்பான கீர்த்தி சுரேஷ்!
என் காதலனை உங்களுக்கு நானே காட்டுகிறேன் என்று பரவும் வதந்திக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ‘மாமன்னன்’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் விளக்கம்
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபர்ஹான் பின் லியாகத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இவரை தான் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருகிறாரா, விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா என்று கேள்வி எழுப்பினர்.
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து பதில் அளித்துள்ளார். அய்யோ, இந்த முறை என் நண்பருடன் சேர்த்து வைத்து பேசிவிட்டீர்களா? காத்திருங்கள். நேரம் வரும் வரை நானே என்னுடைய காதலை உங்களுக்கு காண்பிக்கிறேன். நீங்கள் ஒரு முறை கூட என் காதலரை சரியாக கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடுப்பில் கீர்த்தி சுரேஷ்
அடிக்கடி திருமணம் குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் வந்துக்கொண்டிருப்பதால் கீர்த்தி சுரேஷ் கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷை இணைத்து வைத்து பேசினர். பிறகு, தன்னுடன் படித்த நண்பரை காதலித்து வருவதாக கிசுகிசுத்தனர். இதற்கு கீர்த்தி சுரேஷின் அம்மா அதெல்லாம் கிடையாது என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.