கீர்த்தி சுரேஷ் ஆசையை நிறைவேற்றி வைத்த சமந்தா... புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் சமந்தாவுக்கு நன்றி தெரிவித்துள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹிந்தியில் அறிமுகமாகிய கீர்த்தி
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம்.
அந்த திரைப்படம் வருண் தவான் நடிப்பில் அட்லீயின் தயாரிப்பில் இயக்குனர் காளிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
அதில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் வெளியீடாக திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை பரிந்துரை செய்தது சமந்தா தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக கூறியிருக்கின்றார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது, கீர்த்தியால் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும்.அவரை பேபி ஜான் திரைப்படத்தில் நடிக்க வையுங்கள் என்று சமந்தா தனிப்பட்ட முறையில் கூறியதாக குறிப்பிட்டு அதற்காக சமந்தாவுக்கு நன்றியும் தெரிவித்திருக்கின்றார்.
அதனை அறிந்த சமந்தா ரசிகர்கள் சமந்தாவுக்கு இயல்பாகவே பெரிய மனது என புகழ்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |