ஹிந்தி நடிகருக்கு தழிழ் கற்றுக்கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் காணொளி
நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தி நடிகர் வருண் தவானுக்கு தழிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு கற்றுக்கொடுக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹிந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான் திரைப்படம்.
அந்த திரைப்படம் வருண் தவான் நடிப்பில் அட்லீயின் தயாரிப்பில் இயக்குநர் காளிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
அதில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி திரைக்குவரவுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு மூன்று மொழிகளில் i love you சொல்ல கற்றுக்கொடுக்கும் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |