நடிகையர் திலகமாய் மனதில் இடம்பிடித்த கீர்த்தி சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவு தானா? ஆனால் சம்பளம் அதிகமாம்
இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு பற்றிய விபரம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரஜினி முருகன் திரைப்படம் தான்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ராசியோ என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு நடிகையர் திலகம் படத்தை நடித்து பிரபல நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என கலக்கத் தொடங்கி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
சொத்து மதிப்பு
இன்றைய தினம் கீர்த்தி சுரேஷ் தன் 31 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்ற நிலையில் அவரின் சொத்து மதிப்பு விபரம் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்குகிறார். இப்படி அவர் மொத்தமாக சேர்த்து அவரின் சொத்து மதிப்பு தற்போது 60 கோடியில் இருந்து ரூ.70 கோடி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவருக்கு சென்னையில் சொகுசு வீடும் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பும் இருக்கிறது. அதுமட்டுமல்லாது இவரிடம் இரண்டு மூன்று விலையுயர்ந்த சொகுசு கார்களும் இருக்கிறது.
இது தவிர ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், உஷா இன்டர்நேஷனல், ஜோஸ் ஆலுக்காஸ், உஷா இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் பல பிரபலமான பிராண்டுகளுக்கு அவர் பிராண்ட் தூதராகவும் இருக்கிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
