என் மகளை விட்டுவிடுங்கள்... நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை வேதனை! நடந்தது என்ன?
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சர்ச்சைக்கு அவரது தந்தை உருக்கமாக பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், தேசிய விருதை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
ஆனால் இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் பேசப்பட்டு வருகின்றது. ஆம் கீர்த்தி சுரேஷ் அனிருத், கல்லூரி நண்பர், தொழிலதிபர் என பலரையும் வைத்து காதல் சர்ச்சை எழுந்தது.
தற்போது துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பர்ஹான் என்பவருடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தது மீண்டும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறித்த புகைப்படத்தில் இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்ததால், நீண்ட காலம் காதித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் பரவியது.
திருமண சர்ச்சை
இதற்கு கீர்த்தி சுரேஷ், பர்ஹான் தனது நண்பர் என்றும் அவருடன் திருமணம் என்பது உண்மையில்லை. எனது திருமணம் குறித்து நேரம் வரும்பொழுது நானே நபரை அறிமுகப்படுத்துவேன் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை, பர்ஹான் கீர்த்தியின் நண்பர் மட்டுமே என்றும் திருமணம் நிச்சயமானதும் நானே அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவேன்.
தயவு செய்து கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்... மன உளைச்சலில் இருக்கிறோம்... என் மகளை விட்டுவிடுங்கள் என்றும் தந்தை வேதனையுடன் கூறியுள்ளார்.