கோவாவில் திருமண பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமண கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கோவா பார்ட்டி லுக்கில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் திடீர் என தன்னுடைய திருமண தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்தார்.
ஆனால் இது என்ன மாயம் படத்துக்கு முன்னரே ரஜினிமுருகன் வெளியானது. இதன் பின்னர் ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்ற கீர்த்தி அண்மையில் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதம் தனது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருடன் ஜோடியாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றவில்லை. கீர்த்தி ஹிந்தியில் அறிமுகமாகிய பேபி ஜான் பட ப்ரோமோஷனுக்கும் அவர் தனியாக தான் வந்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் திருமண பார்ட்டி கோவாவில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
தற்போது கீர்த்தியின் வெட்டிங் பார்ட்டி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |