கீர்த்தி சுரேஷ் விரும்பி சாப்பிடும் சோளப்பட்டு சட்னி - நீங்களும் செய்யலாம் ரெசிபி இதோ
வீட்டில் எல்லோரும் மக்காசோளம் வாங்கி இருப்போம். ஆனால் எல்லோரும் தவறு செய்வார்கள் அதில் இருக்கும் அந்த முடி போன்ற பட்டு பகுதியை தூக்கி வீசி விடுவார்கள்.
ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. அதையும் சாப்பிடலாம் என்பது பலருக்கும் தெரியாது. இதை ஒரு மருத்துவ நிபுணர் விளக்கியுள்ளார்.
இந்த சோளப்பட்டுவில் நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் கிட்னிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என பல நன்மைகள் அடங்கியுள்ளன.
இந்த ரெசிபியை கேட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆச்சரியப்ட்டு அதை தனத உணவாகவும் எடுத்து வருகிறார். பலரும் இந்த ரெசிபி கேட்டு அச்சரியபட்டுள்ளனர். அதை நாங்கள் பதிவில் குறிப்பிடுகிறாம்.
தேவையான பொருட்கள்
- சோளப்பட்டு - 50 கிராம்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- வரமிளகாய் - 3
- பூண்டு - 3
செய்யும் முறை
இந்த சோளப்பட்டுவை பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெ ஊற்றி லேசாக வதக்கி அதோடு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
பின் அதை மிக்ஸியில் சேர்த்து அதோடு புளி மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். அவ்வளவுதான் சோளப்பட்டு சட்னி தயார். இத குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
வெறும் 50 கிராம் சோளப்பட்டுவில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. மொத்மாக தினசரி நம் உடலுக்கு தேவைப்படும் 20% நார்ச்சத்தை இந்த சோளப்பட்டிலிருந்தே பெறலாம். இந்த சட்னியை சுடசுட இட்லியுடன் தொட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |