என்னால அத மறக்கவே முடியல.. கீர்த்தி சுரேஷ் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? Open Talk
நடிகை கீர்த்தி சுரேஷ் அவர் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் பற்றிய சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழிப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் “மகாநடி” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது.
தமிழில் கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
மனதை கடுமையாக பாதித்த சம்பவம்
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சோகமாக பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
அதில், “ என்னுடைய நெருங்கிய தோழி மனீஷா அவர் Brain tumor நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரது இழப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருக்கு சரியாக 21 வயதில் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோயுடன் கடந்த 8 வருடங்களாக அவள் போராட்டம் நடத்தினாள்.
கடைசியாக அவளை மருத்துவமனையில் சந்தித்தேன். “என்னால் தாங்கவே முடியவில்லை.” அங்கு எதுவும் கூறாமல் வெளியில் வந்து விட்டேன். நீ இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் உன் நினைவு வராத நாளே இல்லை...” என உறுக்கமாக பகிர்ந்திருந்தார்.
இந்த செய்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |