அட்லீ வீட்டிலேயே ஐக்கியமாகிட்டாரா கீர்த்தி சுரேஷ்!.. வீடியோக்களை பார்த்து கதறும் இணையவாசிகள்
இயக்குநர் அட்லீ வீட்டிலேயே நடிகை கீர்த்தி சுரேஷ் செட்டில் ஆகி விட்டாரா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
இயக்குநர் அட்லி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குநர் அட்லி.
இவர் இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த காரணத்தினால் அடுத்தடுத்து இவரின் திரைப்படங்களுக்கு தனி மவுசு உருவாகி விட்டது.
இதனை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, பிகில் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை இயக்கியுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் அட்லீக்கு ஒரு நல்ல பெயரை எடுத்து கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இவர் இயக்கத்தில் ஜவான் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.
இப்படியொரு நிலையில், வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை அட்லீ தயாரிக்க அவரது உதவி இயக்குனர் காலீஸ் இயக்கி வருகிறார்.
அடுத்த சர்ச்சையில் கீர்த்தி
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், இவர் அட்லீ வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது.
அத்துடன் இன்றைய தினம் ஒரு வீடியோக்காட்சியை வெளியிட்டுள்ளார்.
அதில் அட்லீ மற்றும் அவரின் மனைவி ப்ரியாவுடன் நடனமாடி மகிழ்கிறார்.
வீடியோவை பார்த்த இணையவாசிகள், “ கீர்த்தி அட்லீ வீட்டிலேயே தங்கி விட்டாரா?” என புலம்பும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |