கவிதையுடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட unseen திருமண புகைப்படங்கள்... எகிறும் லைக்குகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட சில வெளியிடப்படாத புகைப்படங்களை அற்புதமான கவிதையுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ திரைபடம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ‘ரஜினிமுருகன்’, ‘பைரவா’, ‘சர்க்கார்’, ‘ரெமோ’ஆகிய ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் பட்டியலில் இடம்பிடித்தார்.
ரஜினியின் ‘அண்ணாத்த’, ‘ரகு தாத்தா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்ற கீர்த்தி அண்மையில் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.
இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த டிசம்பர் மாதம் தனது 15 வருட காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில வெளியிடப்படாத புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ், இதயம் ரெண்டும் இசையெனவே இன்றே இன்றே இணைகிறதே... நட்பே காதல் துணையெனவே காலம் எல்லாம் வருகிறதே... என்ற அழகிய கவிதையுடன் வெளிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |