எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா? சர்ச்சை கிளப்ப முயன்ற விமர்சகர் வாய அடைச்ச கீர்த்தி பாண்டியன்
“ எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா? ” என பயில்வான் வாயை கீர்த்தி பாண்டியன் அடைத்துள்ளார்.
சினிமா பயணம்
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் சினிமாவிற்குள் “தும்பா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் என பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் “ கண்ணகி ” திரைப்படம் நாளைய தினம் திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தில் அம்மு அபிராமி, ஷாலின் சோயா, வித்யா பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கீர்த்தி பாண்டியன் - பயில்வான்
இந்த நிலையில் இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் வழக்கம் போல் எதிரும் புதிருமான கேள்விகளை பயில்வான் கேட்டுள்ளார்.
அதாவது, “ வீட்டுக்குள் கணவர் - மனைவி சண்டைன்னா இந்த வாரம் தியேட்டரில் ரெண்டு பேரோட படமும் மோதுதே? ” என கேட்டுள்ளார். இதற்கு கீர்த்தி பாண்டியன், “ நாங்க சண்டை போட்டோன்னு வீட்டுக்கு வந்து பார்த்துங்கீங்களா?” என பதிலடி கொடுத்துள்ளார்.
பின்னர், “ எங்களுக்குள் போட்டியும் இல்லை சண்டையும் இல்லை..” என கூற, “ சண்டை வந்தால் கணவன், மனைவி இடையே இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்றார்.
கடுப்பான கீர்த்தி, “ அதனை நாங்கள் வீட்டில் பார்த்துக் கொள்கிறேன்..” என தரமான சம்பவம் செய்துள்ளார்.
இந்த செய்தி நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் “ கீர்த்தி பாண்டியன் இப்படியெல்லாம் பேசுவாரா?” என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |