குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அரைக்கீரை குழம்பு! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகள் அநேகமான காய்கறிகள் சாப்பிடமாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒதுக்கும் கீரையில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் இருக்கின்றன.
இது உடலுக்கு தேவையான ஆரோக்கியம், வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி இப்படி ஏகப்பட்ட விடயங்களை கொடுக்கின்றது.
இது போன்ற சத்துக்கள் நிறைந்த கீரையை எப்படி சமைத்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும் என பார்க்கலாம்.
அந்த வகையில் குழந்தைகளை சுண்டி இழுக்கும் வகைகளில் கீரை குழம்பு முக்கிய இடம் பிடிக்கின்றது.
இந்த கீரை குழம்பு எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- அரைக்கீரை – ஒரு கட்டு கடுகு,
- உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – 1/4 குழிகரண்டி
- வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 150 கிராம் (பொடியாக நறுக்கிகொள்ளவும்)
- உப்பு – தேவையான அளவு
- துவரம்பருப்பு – 1/2 ஆழாக்கு (வறுத்து அரைக்கவும்)
- துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
- தனியா – 2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 8
செய்முறை
முதலில் துவரம் பருப்பை எடுத்து நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
பின்னர் அரைக்கீரையை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
அதில் வெங்காயம், தக்காளி இவை இரண்டையும் அடுத்தடுத்து சேர்த்து வதங்க விடவும். வதங்கியதும் பாத்திரத்தில் கீரையை போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.
அரைக்கீரை கொஞ்சம் வெந்ததும் அதில் துவரம் பருப்பை சேர்க்கவும். மிதமான சூட்டில் வைத்து விட்டு இறுதியாக அரைத்த பருப்பு பொடியை தூவி இறக்கவும்.
இதனை சரியாக செய்தால் சுவையான அரைக்கீரை குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |