வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் கீரை போண்டா!
ஒரு வீட்டில் சிறியவரிலிருந்து பெரியவரைக்கும் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதே ஒரு இல்லத்தரசியின் நோக்கமாகும்.
ஆனால் வீட்டில் ஒருசிலர் கீரை உணவை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் கீரை உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
அதற்காக கீரையைக் கொண்டு அவர்களுக்கு பிடித்தமான உணவாக செய்து கொடுத்தால் வெறுப்பில்லாமல் உண்ணுவார்கள். அந்தவகையில், இன்று கீரை போண்டா செய்து கொடுக்கலாம். கீரை போண்டா எவ்வாறு செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- கீரை - ஒரு கை அளவு (முருங்கை, சிறுகீரை, அரைக்கீரை)
- கடலைமாவு - 200 கிராம்
- அரிசி மாவு -1 தே. கரண்டி
- மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி
- ஆப்ப சோடா -1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கீரையை நன்றாக கழுவி பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
இறுதியில் எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கீரை போண்டா ரெடி.