இரவில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவது நல்லதா? கெட்டதா?
இரவில் விளக்குகளில் வெளிச்சத்தில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரவு தூக்கம்
பொதுவாக இரவு தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மறுநாள் காலை மிகவும் சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு முதல்நாள் இரவில் தூக்குவது தான் முக்கியமாகும்.
தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டால் உடம்பில் பல பிரச்சினைகளும் ஏற்பட்டுவிடும். தூங்கும் போது மிதமான வெளிச்சத்தை வைத்து தூங்கினால், இதயம் மற்றும் வளர்ச்சிதை மாற்ற நிகழ்வும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகின்றது.
அதாவது, மிதமான வெளிச்சம், மிகச் சிறிதளவு கண்களின் வழியே மூளையை அடைந்தாலும்கூட, அதனால் நம்முடைய உடலுக்கு மிகப் பெரிய அளவில் கேடுகள் ஏற்படக்கூடும்.
வெளிச்சத்தில் தூக்கம்
வெளிச்சத்தில் தூங்கினால் அமைதியான தூக்கமாக இல்லாமல், இவை ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய பாதிப்பினை ஏற்படுத்துமாம்.
பயத்தின் காரணமாக விளக்கின் பக்கத்திலோ, வெளிச்சத்திலோ தூங்குவது மனஅழுத்தத்தினை குறைக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும். இவை மூளையின் அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது.
இருளை பார்த்து பயப்படுபவர்களுக்கு சிவப்பு நிற விளக்கினை எரிய விடவும். மற்ற நிற விளக்குகளைக் காட்டிலும் சிவப்பு நிற விளக்கினால் ஏற்படும் பாதிப்பு குறைவாகும்.
இருட்டில் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
இருட்டில் தூங்குவது சிறந்த தூக்க தரத்தை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த வழியாகும். பிரகாசமான விளக்குகளை ஏற்றிக்கொண்டு தூங்குவதை விட, மங்கலான வெளிச்சத்தில் தூங்குவது மிகவும் நிம்மதியானது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒரு இருண்ட சூழல் மனதில் அமைதியான விளைவை அளிக்கும், மேலும் மன அழுத்தம் மற்றும் பதட்ட உணர்வுகளை விடுவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |