குழந்தைகள் உணவை வெறுக்கிறார்களா? புது விதமாக செய்து கொடுங்கள் கைமா இட்லி!
பொதுவாகவே குழந்தைகள் உணவுகளில் அறைகுறையாகத்தான் உண்பார்கள். ஆனால் அவர்களுக்கு பிடித்த உணவுகள் என்றால் வெறுப்பில்லாமல் சாப்பிடுவார்கள்.
அவ்வாறான உணவுகள் என்னென்ன என்பதை அறிந்துக்கொண்டாலே அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் சில வரிசையில் சேர்ந்து விடும்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கைமா இட்டிலியை செய்து கொடுத்துப்பாருங்கள். கைமா இட்லியை எவ்வாறு செய்வதென்றுபார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி – 10
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தக்காளி – 2
பச்சை பட்டாணி – 1/4 கப்
குடமிளகாய் – 1
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் (தனியா) தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சோம்பு பொடி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும். பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
இட்லிகளை துண்டுகளாக்கிக் கொண்டு, வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த எண்ணெயில் இட்லிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின், அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் குடைமிளகாயை போட்டு 5 நிமிடம் கிளறி, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். சூப்பரான கைமா இட்லி ரெடி.