கஜகஸ்தானின் எரிபொருள் விலை உயர்வு போராட்டம்; அவசர நிலைப் பிரகடனம் அமல்!
கஜகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்கள் கொந்தளிப்பில் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் காா்களில் எரிபொருளாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விலை உயா்வுக்கு எதிராக அந்நாட்டு தலைநகா் நூா்-சுல்தான், மற்றும் ஆல்மட்டி, மெங்கஸ்டாவ் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆல்மட்டி நகரில் உள்ள மேயா் அலுவலகத்தை சூறையாடிய போராட்டக்காரா்கள், அந்த அலுவலகத்துக்குத் தீ வைத்தனர். போலீஸாரையும் அவா்கள் தாக்கினா். இதில் பலா் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்தால் நூற்றுக்கணக்கானவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டடது.
இதனைத்தொடர்ந்து, எரிபொருள் விலை உயர்வுக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்வதாக அறிவித்த போதும் பொது மக்கள் தொடர் கலவர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நடத்திய தாக்குதலை தடுக்க, ரஷ்யாவிடம் அரசு உதவி கோரி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தால் அங்கு அவசரநிலை பிரகடனமும் அறிவிக்கப்பட்டுள்ளது.