யாழ். புனித யாகப்பர் ஆலயத்தில் மறைந்திருக்கும் வரலாற்று நினைவுகள்
யாழ். புனித யாகப்பர் ஆலயத்தில் மறைந்திருக்கும் வரலாற்று நினைவுகள் பற்றிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
புனித யாகப்பர் ஆலயம்
இலங்கை- யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த வரலாற்று சான்றுகள் அதிகம் உள்ளன.
அப்படியொரு சான்றுகளில் சுமாராக 210 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆலயம் தான் புனித யாகப்பர் ஆலயம்.
இந்த தேவாலயம் ஆனது து/49 ஊர்காவற்துறை கிராம சேவகர் பிரிவிற்குள் உட்பட்டு காணப்படுகின்றது. ஊர்காவற்துறையில் அமைந்துள்ள தேவாலயங்களுள் மிகவும் பழமையானதாகவும் பார்க்கப்படுகிறது.
ஸ்பானிய நாட்டுக்குருக்கள் இலங்கையில் இருந்து தொண்டாற்றிய இடங்களில் புனித யாகப்பர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயம் கடந்த 1815ம் ஆண்டு தை மாதம் 1ம் திகதி கோவைக் குருவாரான வண.டெல்காடோ என்ற தியான சம்பிரதாய சபை குருவால் நடத்தப்பட்டது.
தற்போது புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருக்கும் ஆலய திருவிழாவை பக்தர்கள் கூடி நடத்தி வருகிறார்கள். அத்துடன் இந்த ஆலயத்தில் கலாசார தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் “ஒல்லாந்தர் பள்ளி” 2006.11.17 - 2007.02.23 திகதி அரச வர்த்தமானியில் பிரகடனப்பத்தப்பட்டுள்ளது.
இது போன்று வேறு என்னென்ன சிறப்புக்கள் புனித யாகப்பர் ஆலயத்தில் உள்ளன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |