கொலையை மறைக்க போராடும் கயல்: எப்படி தப்பிக்கப் போகிறார்கள்... பரபரப்பின் உச்சத்தில் வெளியான ப்ரோமோ காட்சி!
தன் மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கொலையை செய்து மறைக்கப் போராடுகிறார்கள் கயலும் அவளின் தங்கையும் பொலிஸாரிடம் சிக்கும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகியிருக்கிறது.
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் கயல் சீரியல். இந்த சீரியல் தகப்பன் இல்லாத ஒரு குடும்பத்தில் மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் தனியாக நின்று போராடும் ஒரு பெண்ணின் கதையை தான் மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் தனது தம்பியின் குடும்பம் என்று கூட பாராமல் ஏழ்மையாக இருக்கும் குடும்பத்தை வளர விடாமல் தடுக்கும் பெரியப்பாவின் மறைமுக சூழ்ச்சிகளையும் சந்தித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள் கயல்.
இவருக்கு அடுத்தடுத்து பல பக்கங்களில் இருந்தும் பல பிரச்சினைகள் சூழ்ந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அதிலிருந்து எப்படித் தப்பிக்கப்போகிறார் என்று அடுத்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
பொலிஸாரிடம் சிக்குவார்கள்...
கடந்த வாரங்களாக எழிலின் திருமணத்தை வைத்து கதையை நகர்த்தி வந்தார்கள். அந்த திருமணத்தில் ஆனந்தியிடம் தப்பாக நடந்துக் கொள்ள வந்தவனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள செய்த சம்பவம் கொலையில் முடிந்து விட்டது.
இதனால் தான் செய்த கொலையை மறைக்க கயலும் ஆனந்தியும் போராடும் போராட்டத்தில் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வார்களா? என்ற கதையோட்டத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |