கயல் சீரியல் ரசிகர்களுக்கு ஷாக்... ஹீரோ சஞ்சீவ் விலகியதாக தகவல்!
kayal serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கயல் சீரியலில் இருந்து அதன் நாயகன் சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய எபிசோடுகளில் சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று வந்த நிலையில், அதன் பின்னணி காரணம் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கயல் சீரியல்
சன் டிவியின் பிரைம் டைம் தொடராக ஒளிபரப்பாகி வரும் கயல், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. சஞ்சீவ் ஹீரோவாகவும், சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும் நடித்து வரும் இந்தத் தொடருக்கு ஆரம்பம் முதலே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வரும் கயல், தொடர்ந்து டிஆர்பியிலும் முக்கிய இடங்களை பிடித்து வருகிறது. தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரின் கதைக்களமும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில எபிசோடுகளாக சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. இதனை வெறும் கதையின் திருப்பம் என்றே ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சீவ் இனி கயலில் நடிக்கமாட்டாரா?
கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டதாக கூறப்படும் ஒரு பிரச்சனைக்குப் பிறகு, சஞ்சீவ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என சீரியலில் பணியாற்றும் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், உண்மையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில், சஞ்சீவ் இனி தொடரில் தோன்ற மாட்டார் என்ற தகவல் மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே கதையில் அவரது கதாபாத்திரத்தை கோமா நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்ற சூழல் ஏற்கனவே சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரிலும் ஏற்பட்டது. அந்தத் தொடரில் நாயகியாக நடித்த கனிகா விலகிய பிறகும், அவரது கதாபாத்திரம் கோமாவில் இருப்பதாகக் கூறி பல மாதங்கள் கதைக்களம் நகர்த்தப்பட்டது.

தற்போது அதே பாணியை கயல் சீரியலிலும் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனி சஞ்சீவின் கதாபாத்திரத்தை கோமா நிலையிலேயே வைத்துக் கதையை நகர்த்தப் போகிறார்களா? அல்லது அவருக்கு பதிலாக புதிய ஹீரோவை களமிறக்கப் போகிறார்களா? இல்லை, சஞ்சீவின் விலகலால் கயல் சீரியலையே முடிவுக்கு கொண்டு வரப் போகிறார்களா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |