கயல் சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த எழிலின் திருமணம்
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் கயல் சீரியல். இந்த சீரியலில் கடந்த நாட்களாக ஒரு திருமணத்தை வைத்துக் கொண்டு இழத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது அது முடிவிற்கு வந்திருக்கிறது.
கயல் சீரியல்
தகப்பன் இல்லாத ஒரு குடும்பத்தில் மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் தனியாக நின்று போராடும் ஒரு பெண்ணின் கதையை தான் மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் தனது தம்பியின் குடும்பம் என்று கூட பாராமல் ஏழ்மையாக இருக்கும் குடும்பத்தை வளர விடாமல் தடுக்கும் பெரியப்பாவின் மறைமுக சூழ்ச்சிகளையும் சந்தித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள் கயல்.
தனது குடும்பத்தில் அண்ணா, தம்பி, தங்கைகள் என எல்லோரையும் கரைசேர்ப்பதற்காக போராடும் கயலுக்கு துணையாக இருப்பவர் தான் எழில். இவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். படிக்கும் காலத்திலேயே எழிலுக்கு கயல் மீது ஒரு காதல் இருக்கிறது.
ஆனால் இந்தக் காதலையும் கயலையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல சதி வேலைகளை செய்து வருகிறார்.
நடந்து முடிந்த திருமணம்
இந்நிலையில், கயலின் பெரியப்பா மகளுடன் எழிலுக்கு திருமணம் செய்ய எழிலின் தாயார் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு முடிவு வந்துள்ளது.
அதாவது எழில் கயலின் பெரியப்பா மகளுக்கு தாலி கட்ட தயாராக இருந்ந வேளையில், திருமண மேடையில் ஏதேதோ கலவரங்கள் ஏற்பட ஒரு வழியாக இந்த திருமணத்தில் இருந்து எழில் தப்பித்து அவரது நண்பரை தாலி கட்ட வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |