கயலிடம் வசமாக சிக்கிய சிவசங்கரி... எழில் தாலி கட்டப் போவது யாருக்கு? பரபரப்பை அடுக்கிக் கொண்டுப்போன சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் TRPயில் முதல் இடத்தில் இருக்கிறது. அதிலும் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ப்ரேமோ காட்சி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
கயல் சீரியல்
தகப்பன் இல்லாத ஒரு குடும்பத்தில் மொத்த குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணத்தில் தனியாக நின்று போராடும் ஒரு பெண்ணின் கதையை தான் மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.
இந்த சீரியலில் தனது தம்பியின் குடும்பம் என்று கூட பாராமல் ஏழ்மையாக இருக்கும் குடும்பத்தை வளர விடாமல் தடுக்கும் பெரியப்பாவின் மறைமுக சூழ்ச்சிகளையும் சந்தித்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறாள் கயல்.
தனது குடும்பத்தில் அண்ணா, தம்பி, தங்கைகள் என எல்லோரையும் கரைசேர்ப்பதற்காக போராடும் கயலுக்கு துணையாக இருப்பவர் தான் எழில். இவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். படிக்கும் காலத்திலேயே எழிலுக்கு கயல் மீது ஒரு காதல் இருக்கிறது.
ஆனால் இந்தக் காதலையும் கயலையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல சதி வேலைகளை செய்து வருகிறார்.
எழிலுக்கு யாருடன் திருமணம்
இந்நிலையில், கயலின் பெரியப்பா மகளுடன் எழிலுக்கு திருமணம் செய்ய எழிலின் தாயார் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எழிலுக்கு கயல் தாலி கட்ட வேண்டும் என்ற எழிலுக்கு மட்டுமல்லாது மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில், கயலுக்கு எழிலின் தாயார் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. இந்தக் காட்சிகளை ப்ரோமாவாக வெளியாகி மக்களின் பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |