இறந்த கயல் சீரியல் நடிகையின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு
‘கயல்’ இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இலங்கையை சேர்ந்த சுபாஷினி உயிர்மாய்த்துக்கொண்டதை அடுத்து அவருடைய கணவரின் எருக்கமான பதிவு வரைலாகி வருகின்றது.

சுபாஷினி
சில நாட்களுக்கு முன்னர், கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுபாஷினி எதிர்பாராத விதமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் சின்னத்திரையில் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இவர் இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு வயது 36. சுபாஸினி அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புக்களை பெற்று சமூக வலைத்தள பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
இவர் இறப்பதற்கு முன்னர் கூட தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியான வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.

ஆனால் திடீரென இவர் தான் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
போலீசார் விசாரணையில் இவர் தன்னுடைய கணவருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது தான் உயிரை மாய்த்துக்கொண்டார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சுபாஷினியின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கணவரின் பதிவு
சுபாசினியின் கணவர் பிபின் சந்திராவாகும். இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். தற்போது பிபின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் தான் சுபாஷினியை இழந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் “நீ இல்லாமல் நான் இல்லை, என்னால் இதை நம்ப முடியவில்லை, நீ இன்னும் என்னுள் வாழ்கிறாய்” உன்று கூறி உள்ளார்.

மேலும், திருமணநாள், பிறந்தநாள், போன்ற முக்கிய தினங்களை ஒன்றாக கொண்டாட வேண்டும் என்று தனக்கு ஆசை இருப்பதாகவும் இனி அதை செய்ய முடியாது என்றும் பதிவிட்டிருக்கிறார்.
அவர், இந்த பதிவை வெளியிட்ட சில மணி நேரங்களில் தன் இன்ஸ்டாகிராம் அகவுண்டை ப்ரைவேட்டாக மாற்றிவிட்டார் . தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |