பிரபல நடிகைக்கு நடந்த காதுகுத்து... வலியால் கண்கலங்கிய காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியல் நடிகையான கயல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சைத்ரா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா நடித்து வருகின்றார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்து வரும் நிலையில் இந்த சீரியல் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
குறித்த சீரியலில் சைத்ரா கயல் என்ற பெயரில் நடித்து வருகின்றார். ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமந்து வருவதுடன், அடுத்தடுத்து பிரச்சனைகளை கடந்து தனது குடும்பத்தை கொண்டு செல்கின்றார்.

நடுத்தர குடும்பத்தினர் எதிர்கொள்ளும் வாழ்க்கையே இதன் கதையாக கொண்டு செல்கின்றனர். இதற்கு முன்பு சைத்ரா யாரடி நீ மோகினி கதாபாத்திரத்தில் பயங்கர வில்லியாக நடித்து ரசிகர்களை எரிச்சலில் ஆழ்த்தினார்.
தற்போது கயல் சீரியலில் இவரது கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்துள்ளதுடன், இல்லத்தரசிகள் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் சைத்ரா தனது மேல் காது குத்தி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியினை வெளியிட்டு 10 நாட்களாக வலியை அனுபவித்து வருவதாகவும், ஆனாலும் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்துள்ளார்.
ஆம் தனது காதில் மேல் பகுதியில் புதிதாக கம்மல் அணிவதற்கு காதுகுத்தப்பட்ட நிகழ்வினை காட்சியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |