அடேங்கப்பா... ‘கயல்’ சீரியல் நடிகர், நடிகைகளின் வெளியான சம்பளப் பட்டியல்: வாயடைத்த ரசிகர்கள்
‘கயல்’ சீரியலில் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கே சீரியல்கள்தான். இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். பெரிய திரையில் நடித்தவர்கள் கூட தற்போது சின்னத்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த அளவிற்கு சீரியல் மக்களை கட்டுப்போட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தினமும் ‘கயல்’ என்ற சீரியல் ஒளிப்பரப்பட்டு வருகிறது. ‘கயல்’ சீரியலில் தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையாகும். கயலையும், அவரை காதலிக்கும் சஞ்சீவ்வை சுற்றித்தான் இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது எழிலின் அம்மா கயல் குடும்பத்தை பழிவாங்க திட்டமிடுகிறார். இதனால், கயல் குடும் பரிதவிக்க, முடிவில் எழில் கயலுக்கு உதவி செய்ய, எழிலின் அம்மாவை சுக்குநூறாக்குகிறார் கயல். இதன் பிறகு எழிலை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார்.
எழிலை கயல் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துன் பார்க்க வேண்டும். தற்போது, சன் டிவி சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து ‘கயல்’ சீரியல் அசத்தியுள்ளது.
இதுவரை ‘கயல்’ சீரியல் 550 எபிசோடுகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பவம் விவரம் வெளியாகியுள்ளது.
ஒரு நாளைக்கு யார், யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம் -
சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்
சஞ்சீவ்- ரூ. 15,000 முதல் 20,000 வரை
தேவி- ரூ. 6 முதல் 8 ஆயிரம் வரை
விக்னேஷ்- 12 முதல் 14 ஆயிரம் வரை
காமாட்சி- ரூ. 10 முதல் 12 ஆயிரம் வரை
மற்ற நடிகர்கள் - ரூ. 10 ஆயிரத்திற்கு கீழ் வாங்குகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |