நாட்டு நாட்டு பாடலுக்கு நாட்டுக்குத்து குத்திய கயல் சீரியல் நடிகை! வைரலாகும் வீடியோக்காட்சி
நாட்டு நாட்டு பாடலுக்கு நண்பனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட சைத்திராவின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எப்படி சின்னத்திரைக்கு வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, “யாரடி நீ மோகினி” என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.
இவரின் வில்லத்தனமாக பேச்சிற்கும் ஆக்டிங்கிற்கும் தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்கள் சேர்த்து வைத்திருக்கிறார்.
இந்த சீரியலில் சைத்ராவின் ஆக்டிங் வியக்கத்தக்கதாகவும் பலரால் பராட்டத்தக்கவையாகவும் இருந்து வந்தது.
இவர் வெள்ளத்திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கன்னட சினிமா பக்கம் வாய்ப்பு தேடி அழைந்தவராம். தேடி அலைந்து கடைசியில் “யாரடி நீ மோகினி” என்ற சீரியலில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம், இதன் மூலம் தற்போது சின்னத்திரையில் , “கயல்” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஒஸ்கார் விருது பெற்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிரபலம்
இந்த நிலையில், சைத்திரா அடிக்கடி நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இவர் திருமணத்திற்கு பிறகு இந்த பழக்கத்திற்கு கொஞ்சம் பிரேக் விட்டுள்ளார்.
தற்போது அவருடைய தோழனுடன் இணைந்து, “ நாட்டு நாட்டு” என்ற ஒஸ்கார் விருது பெற்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை பார்த்த நெட்டிசன்கள்,சைத்ராவை கொஞ்சம் காலம் மிஸ் பண்ணியதாக கூறியுள்ளார்கள்.