ட்ரெண்டிங் உடையில் சுற்றித்திரியும் நடிகை கயாடு லோகர்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் கயாடு லோஹர் ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கயாடு லோஹர்
மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கயாடு லோஹர்.
அதனை தொடர்ந்து, வேற்று மொழி படங்களில் நடித்து வந்த இவர்,பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் பல்லவி என்ற கதாப்பாத்தில் நடித்து தழிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அதில் காயடுவின் கதாப்பாத்திரம் இளசுகளை வெகுவாக ஈர்த்தது. இதனால் தமிழில் அறிகமுக படத்திலேயே தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
தற்போது அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியும் இவர் தான் என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் சுற்றித்திரியும் கயாடுவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |