பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் முல்லை? வைரலாகும் பதிவு
அண்ணன்- தம்பி பாசத்தை மையமாக கொண்டு உருவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கதிர்- முல்லை
இதில் கதிர்- முல்லை ஜோடிக்கு தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள், முல்லையாக நடித்து வருகிறார் காவ்யா.
தற்போது இருவரும் வீ்ட்டிலிருந்து வெளியேறி ஹொட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள், இதற்கு மறைமுகமாக அவர்களது குடும்பமே ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில் முல்லையாக நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரலாகும் பதிவு
அதாவது, ஸ்டாலின், சுஜிதா, குமரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை காவ்யா தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு மிஸ் யூ ஆல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகுகிறாரா? என்ற அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காவ்யா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதால் இந்த முடிவை எடுத்து விட்டாரா எனவும் யோசித்து வருகின்றனர்.
