சினிமா பக்கம் ரூட்டை மாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! மார்டன் உடையில் கலக்கலான புகைப்படங்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த முல்லை தற்போது மார்டன் உடையில் பட்டைய கிளப்பி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் சீரியலிகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் இடத்தை பிடிக்கிறது.
இந்த சீரியலில் வரும் காட்சிகள் சினிமாவை போல் இருப்பதாலும் மற்றும் இதில் வரும் கதாபாத்திரங்களின் யதார்த்தமான நடிப்பாலும் பட்டிதொட்டியெங்கும் பிரபல்யமடைந்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து இதில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற கதாபாத்திரமாக முல்லை கேரக்டர் பார்க்கப்படுகிறது. இதற்கு விஜே சித்ரா தான் முக்கிய காரணம்.
புதிய முல்லையாக மாறிய பிரபலம்
இவர் இறந்த பின்னர் முல்லையாக காவியா அறிவுமணி நடித்து வந்தார்.
இவர் முல்லையாக மக்கள் ஏற்றுக் கொண்டு வரும் போது படவாய்ப்பு வருவதாக கூறி சின்னத்திரையை விட்டு சென்றார்.
இதன் பின்னர் படிப்பில் அதீத கவனம் செலுத்தியமையினால் காவியா ஆர்கிடெக்ட் படித்து முடித்து விட்டு தற்போது பட்டம் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் தமிழில் சில படங்களில் நாயகியாக கமிட்டாகி நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்டன் உடையில் தங்க ரதிபோல் காட்சியளிக்கும் காவியா
இவர் சின்னத்திரையை விட்டுவிலகினாலும் சமூக வலைத்தளப்பக்கம் எப்போது ஆக்டிவ்வாக தான் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது மார்டன் உடையில் பளபளப்பாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கம் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் மெழுகு சிலைப் போல் இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.