வீட்டில் சிக்கன் இருக்கா? அப்போ கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவி செய்ங்க
அனைவரது வீட்டிலும் அசைவம் என்றால் சிக்கன் தான் அதிகமாக சமைப்பார்கள். இந்த சிக்கனை வைத்து பல உணவுகளை தயாரிப்பார்கள்.
ஆனால் இன்றைய நாள் வீட்டில் வித்தியாசமான முறையில் ஒரு சிக்கன் கிரேவி செய்தால் சுவை அள்ளும். இதை பத்த நிமிடத்தில் மிகவும் எளிதாக செய்ய முடியும்.
இந்த ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு அற்புதமாக இருக்கும். இது தான் கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - 3/4 கிலோ
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 1 (நறுக்கியது)
- பூண்டு - 10 பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- சோம்பு - 2 டீஸ்பூன்
- பட்டை - 2 துண்டு
- கிராம்பு - 4
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
- தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில் மிளகு, சீரகம், பட்டை, சோம்பு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 துண்டு பட்டை, 2 கிராம்பு, 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கி, பின் 5 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கவுண்டம்பாளையம் சிக்கன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |