மது விருந்தில் ஆபாச நடனம்: பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை! பொலிசாரின் அதிரடி
பண்ணை வீட்டில் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய பிரபல நடிகை மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் ‘சுகுணா கார்டன்’ என்ற பண்ணை வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதியை மீறி பார்ட்டி நடைபெற்றுள்ளது.
இந்த பார்ட்டியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், மதுபோதையில் ஆபாச நடனமாடியுள்ளனர். இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிய வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் மது விருந்தும், ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் சினிமா படப்பிடிப்பு நடத்தும் பண்ணை வீட்டினை 15 ஆயிரத்துக்கு வாடகை எடுத்து, 10 பெண்களை ஆபாச நடனமும் ஆட வைத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் விதிகளை மீறி இவ்வாறு பார்ட்டி நடத்திய நடிகை கவிதா ஸ்ரீ உட்பட 17 பேர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
