பெட்ரூம் காட்சியில் லொஸ்லியா, தர்ஷன்! எட்டிப்பார்க்கும் கவின்? ரசிகர்கள் ஷாக்…காட்டுத் தீயாய் பரவும் மீம்ஸ்
பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடிகளாக வலம் வந்த கவீன் மற்றும் லொஸ்லியா இருவரும் வெளியில் வந்த பிறகு அவர் அவரவர்கள் வழியை பார்த்து சென்றுவிட்டனர்.
அதைத்தொடர்ந்து லொஸ்லியா பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் கூகுள் குட்டப்பா.
கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் .
இதில் லொஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் பெட்ரூம் காட்சியில் நடித்திருந்தனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் லொஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.


