திருமணத்தில் வெறும் 120 பேருக்கு எத்தனை கோடி செலவு செய்தார் கத்ரீனா? வாயடைத்துப் போயிடுவீங்க
பாலிவுட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் என்னவென்றல் அது கத்ரீனா கைப் மற்றும் விக்கி ஜோடியின் ஆடம்பர திருமணம் தான்.
இன்று திருமணம் செய்த இந்த ஜோடிகள், தங்கியுள்ள இடத்திற்கு மட்டும் எத்தனை கோடி செலவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. மூன்று நாட்கள் விழா கோலம் பூண்ட இவர்களது திருமணம், சங்கீத், மெஹந்தி, ஹல்தி கொண்டாட்டத்தை தொடர்ந்து இன்று முடிந்தது.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு 40க்கும் மேற்பட்ட சொகுசு விடுதியினை முன்பதிவு செய்ததோடு, பொழுது போக்கிற்கு, முன்னணி பாடகர்களின் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், அவர்களுக்கும் ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருப்பதாக தங்களின் திருமண பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.
சுமார் 120 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்த நிலையில், அவர்களின் தங்கும் இடம் மற்றும் உணவிற்கு மட்டுமே சுமார் 4 கோடியை இந்த ஜோடி செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் திரையுலகை பொறுத்தவரை மிகப்பெரிய தொகையை செலவு செய்து திருமணம் செய்து கொள்வதை பல பிரபலங்கள் வழக்கமாக கடைபிடித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடியும் கோடி கணக்கில் பணம் செலவு செய்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.








