Brinjal Rice: பிரியாணியை மிஞ்சும் சுவையில் கத்தரிக்காய் சாதம்... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமாக சமைத்து சாப்பிடுதில் அதிக ஆர்வம் இருக்கும். அதிலும் பிரியாணி பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.
கர்நாடக பாணியில் பிரியாணி சுவையை மிஞ்சும் அளவுக்கு அசத்தல் சுவையில் கத்திரிக்காய் சாதத்தை எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் 4-5
கொத்தமல்லி - கைப்பிடி
புளி சாறு - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - 1 தே.கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் -5
காய்ந்த தேங்காய் (துருவியது)- 1/2 கப்
அரிசி - 1 கப்
கடுகு - 1 தே.கரண்டி
மினபாப்பு - 1 தே.கரண்டி
நெய் - 1 தே.கரண்டி
மசாலா (ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு) - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எள் - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - தாளிக்க
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரையில் நிறுத்தி வைக்க வேண்டும்.
பின்னர் கத்திரிக்காய்களை மெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
அதனையடுத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், உளுந்து, எள், வெந்தயம், கிராம்பு மற்றும் கொத்தமல்லி விதைகளை போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அத்துடன் கருப்பு மிளகு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்து நன்றாக ஆறவிட வேண்டும்.
பின்னர் ஆறவைத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வரையில் வறுக்க வேண்டும்.
அதனையடுத்து புளி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு தேவையான உப்பு சேர்த்து, இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதனுடன் சேர்த்து 3 நிமிடங்கள் வரையில் மூடி வைத்து சமைக்க வேண்டும்.
அதன் பின்பு அதனுடன் கத்திரிக்காயையும் சேர்க்க வேண்டும்.பின்னர் அதில் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கத்தரிக்காய் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |