வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று.
இதை தயிரில் இருந்து செய்வார்கள். இதை பலரும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்வார்கள். பொதுவாக இது வெண்டக்காயை வைத்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
ஆனால் கத்தரிக்காயில் மோர் குழம்பு செய்தால் அது மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் - 3 சிறியது (Eggplant)
- எண்ணெய் - தேவையான அளவு
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- தயிர் - ஒரு கப்
- உப்பு - தேவையான அளவு
மேரினேட் செய்ய
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ¾ டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- உப்பு ½ டீ ஸ்பூன்
தாளிக்க
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- வரமிளகாய் - 4
- சின்ன வெங்காயம் - 8
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கடலைப்பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் சூடான நீரில் மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கத்திரிக்காயை போட்டு இரண்டு நிமிடங்களுக்கு வைக்கவும். பின் கத்தரிக்காயை வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ½ மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் ¼ டீ ஸ்பூன் சீரகத்தூளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
இதன் பின்னர் தயிருடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதனுடன் வறுத்து வைத்த சீரகத்தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் தோசைக்கல் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காயவிடவும். பின்னர் ஊற வைத்த கத்தரிக்காயை சேர்த்து நன்கு வேக விடவும். இதை திருப்பி விட்டு திருப்பி விட்டு வேக விடவும்.
இந்த வேகவைத்த கத்திரிக்காயை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும். பின் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் வரமிளகாய் காம்புகளை நீக்கி விட்டு இரண்டு மூன்றாக கிள்ளி சேர்த்து கொள்ளவும். கடைசியாக பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அடுப்பை விட்டு இறக்கவும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காயவிடவும். எண்ணெய் காய்ந்ததும் உங்களுக்கு பிடித்த காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூளை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வைக்கவும். பின் அதை தயிருடன் கலந்தால் சுவையான கத்திரிக்காய் மோர் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |