கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு... இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் கத்தரிக்காய் என்பது முக்கிய பங்கு வகிக்கும் காய்கறியாகும்.
கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்தவகையில் எப்படி கத்தரிக்காய் வைத்து கிராமத்து ஸ்டைலில் காரக்குழம்பு செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4
நல்லெண்ணெய் - 4மேசைக்கரண்டி
கடுகு - 1மேசைக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
வெந்தயம் - 1/2தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 25
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
2 தேக்கரண்டி தனியா தூள்
2 தேக்கரண்டி சாம்பார் பொடி
புளி கரைசல் - 1கப்
வெல்லம் -1தேக்கரண்டி
செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.
[YO5W9E ]
பிறகு கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும். பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
அடுத்து புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
இறுதியாக வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கினால் கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் காரக்குழம்பு ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |