Kashmiri Mutton keema: ஒருவாட்டி சாப்பிட்டாலே போதும்.. காஷ்மீரி மட்டன் காரமாக செய்வது எப்படி?
பொதுவாக சைவ பிரியர்களை விட அசைவ பிரியர்களின் எண்ணிக்கை தான் அதிகம். மட்டன் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
வழக்கமாக நாம் செய்யும் மட்டன் கறியை விட காஷ்மீரி மட்டன் செய்து சாப்பிட்டால் வீட்டிலுள்ளவர்கள் உங்கள் சமையலுக்கு அடிமையாக இருப்பார்கள்.
அந்த வகையில், காஷ்மீரி மட்டன் கீமா எப்படி காரசாரமாக வீட்டில் செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் கீமா - 1 கிலோ
- சீரகம் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை - அரை கப்
- நெய் - 1 ஸ்பூன்
- பிரியாணி இலைகள் - சிறிதளவு
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- வெந்தயப்பொடி - 1/2 ஸ்பூன்
- சோம்பு பொடி - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- உப்பு - ருசிக்கு தேவையான அளவு
காரசாரமாக எப்படி செய்றாங்க தெரியும
மட்டன் கீமாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், மட்டன் கீமாவை போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், சோம்பு பொடி, சுக்கு பொடி, ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்போது அந்த கலவையை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உருட்டிக் கொள்ளவும். ஒரு கிலோ கீமாவில் 35 முதல் 40 வரை பால்ஸ் தயாரிக்கலாம். இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும், அதில் பெருங்காயம், சீரகம் போட்டு வறுக்கவும்.
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்த பின்னர், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இது கொதிக்கும் போதே ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். அந்த தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து, உருட்டி வைத்திருக்கும் கீமா பால்ஸை அதில் போட வேண்டும்.
கடைசியாக நன்றாக வேக வைத்து எடுத்தால் ருசியான காஷ்மீரி மட்டன் கீமா ரெடி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |