Sunday special: நாவூரும் சுவையில் கிராமத்து கோழி குழம்பு... இப்படி செய்து அசத்துங்க
ஞாயிற்று கிழமை பெரும்பாலானவர்களின் விடுமுறை தினமாக இருப்பதால், இன்று தான் நாவுக்கு சுவையாக சமைத்து ஆறுதலாக சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள்.
அப்படி சாப்பாட்டுக்கும் ஓய்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஞாயிற்று கிழமையை இன்னும் சிறப்பாக்க கிராமத்து பாணியில் பார்த்தாலே பசி எடுக்கும் வகையில் அசத்தல் சுவையில் கோழி குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோழிக்கறி - 1/2 கிலோ கிராம்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 4
சிவப்பு மிளகாய் - 8
தனியா - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கசகசா - 1 தே.கரண்டி
தேங்காய் - 1/2 மூடி
கிராம்பு, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கோழி இறைச்சியை நன்றாக சுத்தமாக செய்து இரண்டு முறை கழுவிய பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒது பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிவப்பு மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். கிராமத்து சுவைக்கு முக்கியமானது இந்த அரைத்த மசாலா தான்.
அதனையடுத்து இஞ்சி, பூண்டையும் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை மற்றும் கிராம்பையும் போட்டு வதக்கி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியை போட்டு அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி கோழிக்கறி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
சிக்கன் நன்றாக வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காயை போட்டு வதக்கி, கறி முழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேத்து இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் கிராமத்து கோழிக் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |