பாட்டி ஸ்டைல் கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி?
Curry Leaf
Hair Growth
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே கருவேப்பிலையில் பல நன்மைகள் இருகின்றது. கருவேப்பிலையை அதிகமானோர் முடி வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்வது தான் வழக்கம்.
ஆனால் முடி வளர்ச்சிக்கு மாத்திரமின்றி இது உடலுக்கும் பல நன்மைகளை தருகின்றது. ஒரு சிலர் இதை வைத்து சட்னி செய்து சாப்பிடுவது தான் வழக்கம்.
ஆனால் பெரும்பாலானோர் இதை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் இதன் சுவை.
ஆகவே வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு எப்படி சுவையான கருவேப்பிலே குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
எண்ணெய் - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கப்
- நல்லெண்ணெய்- 5 ஸ்பூன்
-
சுண்ட வத்தல் - 5
- காய்ந்த மிளகாய்- 2
-
கடுகு- 1 டீஸ்பூன்
- பூண்டு- 5
- சீரகம்- 1 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள்- சிறிதளவு
-
தேங்காய்-2 டேபிள் ஸ்பூன்
-
குழம்பு தூள்- 2 டேபிள் ஸ்பூன்
-
மிளகாய் தூள்- 2 டேபிள் ஸ்பூன்
-
தக்காளி- 3
-
புளி- சிறிய எலுமிச்சை அளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை சேர்த்து மொறு மொறு பதத்திற்கு வதக்கவும்.
- பின் அதே பாத்திரத்தில் நல்லெண்ணைய் 5 ஸ்பூன் அளவிற்கு ஊற்றி, சுண்ட வத்தல் சேர்த்து வறுக்கவும். பின் தனியாக எடுத்து வைக்கவும்.
- மிக்ஸியில் வறுத்த கறிவேப்பிலை, வத்தல், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
- அதே எண்ணெய்யில் கடகு, மிளகாய், சீரகம், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, பெருங்காயத் தூள், 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3 தக்காளி மிக்ஸியில் அடித்து அரைத்துக்கொள்ளவும்.
-
அடுத்து சிறிதளவு அளவு சூடான தண்ணீர் சேர்த்து, அரைத்த கறிவேப்பிலையை இதில் சேர்க்கவும். புளி தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- உப்பு சேர்த்து சுவை பார்க்கவும். இப்போது மீண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
- இறுதியாக சுண்ட வைத்து எடுத்தால் சுவையான கருவேப்பிலை குழம்பு ரெடி!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US