Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி தோசை செய்வது தான் வழக்கம். இதற்கு தொட்டுக்கொள்ள வழக்கமான முறையில் தான் சட்னி செய்கின்றீர்களா?
அப்படினால் இந்த முறை சற்று வித்தியாசமான முறையில் கருப்பு உளுந்து சட்னி செய்த கொடுங்க வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீண்டும் ஒரு முறை கேட்டு சாப்பிடுவார்கள்.
அச்சகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து சட்னியை எவ்வாறு எளிமையான முறையில் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
கருப்பு உளுந்து - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 5
பூண்டு - 8 பல்
தக்காளி - 4 (நறுக்கியது)
கல் உப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு உளுந்து சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரமத்தில் சீரகம், வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி, பின்பு அதனுடன் தக்காளி மற்றும் கல் உப்பு தூவி வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளி மென்மையாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு, வதக்கிய அனைத்தையும் குளிரவிட்டு, ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
கடைசியில் சட்னியை தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு தாளித்து அதனை சட்னி கிண்ணத்தில் ஊற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கருப்பு உழுந்து கார சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |