பானை வயிற்றை குறைக்கும் கஞ்சி.. எப்படி செய்றாங்க தெரியுமா?
தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதில் உள்ளவர்கள் கூட தொப்பை வந்து விடுகிறது.
தொப்பை நன்றாக வளர்ந்த பின்னர், அதனை குறைப்பதற்காக உடற்பயிற்சிகள், டயட் பிளான்கள் செய்து கொண்டிருப்பார்கள்.
முறையான டயட் மற்றும் உடற்பயிற்சி இருந்தால் தொப்பை குறைந்த நாட்களில் குறைத்து விடலாம்.
அப்படியானால் காலை எழுந்ததும் நன்றாக தண்ணீர் குடித்த பின்னர் இட்லி, தோசை என எடுத்துக் கொள்ளாமல் திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது தொப்பையை குறைக்க உதவியாக இருக்கும்.
சிறுதானியங்களான கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, மூங்கில் அரிசி போன்றவற்றை ஒன்றாக போட்டு கஞ்சி செய்து குடிக்கலாம். இது உடல் எடையையும் குறைக்கிறது.
அந்த வகையில், கருப்பு கவுனி கொள்ளு கஞ்சி எப்படி செய்வது என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கவுனி அரிசி - 1 கப்
- கொள்ளு - 1 கப்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- கஞ்சி பவுடர் - 3 ஸ்பூன்
- தண்ணீர் - 1/2 லிட்டர்
- உப்பு - சுவைக்கேற்ப
- மோர் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)
- சின்ன வெங்காயம் - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)
கஞ்சி செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், கொள்ளு, சீரகம் மற்றும் மிளகு போட்டு நன்றாக வறுக்கவும். அதன் பின்னர், வறுத்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி குளிர வைக்கவும்.
அதே கடாயில் கருப்பு கவுனி அரிசியையும் போட்டு வறுத்து குளிர வைக்கவும். வறுத்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒரே மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைக்கவும்.
இந்த மாவை காற்றுப்புகாத டப்பா போட்டு அடைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து, காலையில் எழுந்ததும் ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் மாவை போட்டு, 1/2 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கஞ்சி நன்றாக கொதித்து கட்டியானதும் கஞ்சியை கிளறி விட்டு இறக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி கொஞ்சம் சூடு இறங்கிய பின்னர், மோரை ஊற்றி கலந்து, அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு பரிமாறினால் ஆரோக்கியமான சுவையான கருப்பு கவுனி கொள்ளு கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |