குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான கருணைக்கிழங்கு பஜ்ஜி - செய்வது எப்படி?
கருணை கிழங்கை பலரும் சாப்பிடவதவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் இதிலுள்ள நன்மைகள் ஏராளம். வாரம் ஒரு முறை கருணை கிழங்கை சாப்பிட்டால் எலும்புகள் வலிமை பெறுமாம்.
அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கருணை கிழங்கில் பஜ்ஜி எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை விளக்கம்
முதலில் கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
அடுத்து, ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.