Karthigai Deepam:பிரியப்போற உனக்கு கல்யாணம் எதற்கு? அம்மாவுக்கு சவால் விட்ட மகள்
கார்திகை தீபம் சீரியலில் ரேவதியை கல்யாண நாள் கொண்டாட விடாமல் அவரது அம்மா சாமுண்டீஸ்வரி தடுக்கிறார்.

கார்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் வார நாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியை கட்டியணைத்து திருமணநாள் வாழ்த்துக்களை கூறிய நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது பற்றி பதிவில் பார்க்கலாம்.

அம்மாவுக்கு சவால் விட்ட மகள்
அதாவது ரேவதி கேக் வெட்டி கல்யாண நாளை கொண்டாட ஏற்பாடு செய்திருக்க சாமுண்டீஸ்வரி உனக்கு விவாகரத்துக்கு அப்ளை பண்ணி இருக்கும்போது இதெல்லாம் எதுக்கு? பிரிய போற நீ எதுக்கு கல்யாண நாளை கொண்டாடணும் என்று கேள்வி கேட்கிறாள்.
ரேவதி அதற்கு பதிலடி கொடுக்க கார்த்திக் கூடிய சீக்கிரம் இந்த குடும்பத்தை சேர்த்து வைப்பேன் என்று சவால் விட சாமுண்டீஸ்வரி கோபத்தோடு அந்த இடத்தை விட்டு போகிறார்.
இதன் பின்னர் ரேவதிக்கு பைக் ஷோரூமில் இருந்து போன் செய்து பைக் ரெடியாகி விட்டதாகவும் டெலிவரி எடுத்துக் கொள்ளும்படி அழைப்பு வந்துள்ளது.
ஆனால் கார்த்திக் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று சொன்னதால் எப்படி அதை மீறி வெளியே செல்வது என குழப்பத்துடன் இருக்கிறாள்.
இப்படி இருக்க மேலும் என்ன நடக்கப்போகிறது என்பதை இன்று பிரபல டிவியில் ஒளிபரப்பாவதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |