Karthigai Deepam: இன்று எத்தனை அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்?
Karthigai Deepam: இன்று கார்த்திகை தீப திருநாள் கொண்டப்படும் நிலையில், அகல் விளக்குகள் எந்த திசையில் ஏற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கார்த்திகை திருநாள்
பொதுவாக கார்த்திகை மாதம் என்றாலே ஒளிரும் அகல் விளக்குகள் தான் முக்கியமான தோன்றும். இதில் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக பக்தி உணர்வுடன் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளில் பூஜை அறை முதல் வீட்டு வாசல் மற்றும் சுற்றுச்சுவர்கள் இவற்றில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது தமிழர்களின் பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
குறிப்பாக திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தினைக் காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு செல்வார்கள்.
அதாவது கார்த்திகை மாதத்தில் வரும பௌர்ணமி திதியும், கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வருவதால் இந்நாள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

ஏன் கொண்டாப்படுகின்றது?
கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கான காரணமும் ருக்கின்றது. அதாவது ஒருமுறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கு இடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களின் ஆணத்தினை அகற்றுவதற்காக சிவபெருமான் அடிமுடி காண முடியாத பிரம்மாண்ட ஜோதி வடிவமாக தோன்றினாராம்.
இந்த ஜோதியின் அடியைக் காண திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டிச் சென்றதாகவும், முடிவைக் காண பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்து வானத்தினை நோக்கி பறந்தாகவும், ஆனால் இருவராலும் சிவபெறுமானின் அடியையும், முடியையும் கண்டறிய முடியவில்லையாம்.
கடைசியில் சிவபெருமான் தான் முழுமுதற்கடவுள் என்பதை இருவரும் உணர்ந்ததாக புராணக் கதைகள் கூறுகின்றது.

எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?
கார்த்திகை தீப திருநாளில் இத்தனை விளக்கு தான் என்று கட்டாயம் இல்லையாம். தங்களது குடும்ப வசதிக்கு ஏற்ப விளக்குகளை ஏற்றிக்கொள்ளலாம்.
ஆனாலும் சிலர் பாரம்பரியமாகவும், ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றுகின்றனர்.
பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 விளக்குகளும், நவ கிரகங்களின் அருளைப் பெற 9 விளக்குகளையும், 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 விளக்குகளையும், 108 ஆன்மீக வழிபாடுகளில் சிறப்பான எண்ணிக்கையை போற்றும் விதமாக 108 அகல்விளக்குகளையும் ஏற்றலாம்.
மேலும் வீட்டு வாசற்படி, பால்கனி, மொட்டை மாடி, வீட்டின் முற்றம் இங்கும் ஏற்றப்படுகின்றது. அதிகமான விளக்குகளை ஏற்றினால் அதிகமான பலன் கிடைக்கும் என்பது இல்லையாம். கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபடுவது மிகுந்த சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |